உள்ளூர் செய்திகள்

நைஜீரியா லாகோஸ் முருகர் ஆலயத்தில் நவராத்திரி விழா

நைஜீரியா லாகோஸ் முருகர் ஆலயத்தில் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, ராஜ ராஜேஸ்வரி, மீனாட்சி, காமாட்சி, பிரத்யங்கிரா, சாந்தான லட்சுமி, வாராஹி, அன்னபூரணி, சிவபூஜை அம்மன், மகிஷாசுர மார்தினி, சரஸ்வதி ஆகிய வடிவங்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். லலிதா சஹஸ்ரநாம பாராயணம் தினமும் நடைபெற்றது. குழந்தைகள் உற்சாகமாக ஜபம் செய்து அம்மன் அருளைப் பெற்றனர். மகாலட்சுமி பூஜையில் 42-க்கும் மேற்பட்ட சுமங்கலிகள் கலந்து கொண்டனர். விஜயதசமி தினத்தில் கும்மி நடனம் மற்றும் மூலபரை விஸர்ஜனம் நடைபெற்றது. சிவாசாரியார் பிரகாஷ் குருக்கள் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. இறுதிநாளான சரஸ்வதி பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர். - நைஜீரியாவிலிருந்து நமது வாசகர் பிரதிமா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்