ஜாம்பியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள்
ஜாம்பியாவின் தலைநகரான லூசாகாவில் தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் சார்பாக மகளிர் தினம் சிறப்பாக நடத்தேறியது.2023 நிர்வாக குழுவின் முதல் நிகழ்ச்சி என்பதால், முடித்த 2022 நிர்வாக குழுவினர் கவுரவ படுத்தபட்டனர். புதிய நிர்வாக குழுவின் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகளிர் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டு போட்டிகளும் அரங்கேறியது. அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதுமுன்னூறுக்கும் அதிகமான தமிழர்கள் குடும்பம் சகிதம் கலந்து விழாவை சிறப்பித்தனர், விழாவின் இறுதியில் அனைவர்க்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.