கானாவில் ஆவணி அவிட்டம்
வேதத்திற்கான பண்டிகை ஆவணி அவிட்டம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் சிரத்தையுடன் கொண்டாடப்பட்டது. ஆவணி அவிட்டம் எனும் ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட அந்தணர்கள் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்திற்கு வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் கடைபிடிக்கும் மகத்தான வழிபாட்டு நாளாகும். சிரத்தையுடன் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில் கானா நாட்டின் தலை நகர் ஆக்ரா வில் உள்ள அன்பர்கள் இனைந்து பூணுல் மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் வேத பாராயணங்கள் நடந்தேறியது. கானாவில் பணி புரிந்து வரும் நெல்லையை சேர்ந்த ராம ராஜகோபாலன் இந்த ஆண்டும் தலைமையேற்று பூஜையை சாஸ்திரங்களின் படி நடத்தினார். ஆவணி அவிட்டம் என்றால் அந்தணர்கள் பூணூல் மாற்றிக் கொள்ளும் ஒரு சடங்கு மட்டும் இல்லை என்றும் வேத பாடங்கள் கற்றுக்கொள்ள தொடங்கும் நன்னாள் என்று ராம ராஜகோபாலன் கூறினார். அன்பர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு ராமநாதன் இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீனிவாசன், சாய்பாபு, ஆனந்த், கார்த்திக், கோட்டயம் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சடங்கு முடிந்ததும் நெய்வேதனம் செய்யப்பட்ட பிரசாதங்கள் பரிமாறப்பட்டன.- நமது செய்தியாளர் அரவிந்த் என்,ஜி.