உள்ளூர் செய்திகள்

ஹாங்காங்கில் முதன்முறையாக வியக்கத்தகு இந்திய விழா

ஹாங்காங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் மக்காவ் SARs முதன்முறையாக நடத்திய இந்தியா விழாவால், ஹாங்காங்கின் இரவு வாழ்க்கை மாவட்டத்தின் மையப்பகுதியான லான் குவாய் ஃபாங் (LKF), ஒரு துடிப்பான கலாச்சார மையமாக மாறியது. லான் குவாய் ஃபாங் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, உள்ளூர்வாசிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்தது. ஒரு உயிரோட்டமான தேசி பஜார் மற்றும் கலாச்சார களியாட்டம் LKF இல் உள்ள வோ ஆன் லேன், இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் இந்திய உணவு வகைகளை வழங்கும் ஒரு பரபரப்பான தேசி பஜாராக காணப்பட்டது. இதற்கிடையில், ஆம்பிதியேட்டர் இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் மையமாக மாறியது, மயக்கும் நிகழ்ச்சிகள், யோகா அமர்வுகள், சமையல் பட்டறைகள், இந்திய திரைப்படத் திரையிடல்கள் மற்றும் ஒரு மின்னூட்டும் பாலிவுட் மற்றும் கர்பா நடன இரவு ஆகியவை அங்கு இடம் பெற்றன. இந்தியாவின் காலத்தால் அழியாத மரபுகளை ஒரு துடிப்பான சூழலில் பார்வையாளர்கள் ரசித்து மகிழ்ந்தனர். மயக்க வைக்கும் நடன நிகழ்ச்சிகள் விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று பிரமிக்க வைக்கும் தொடர்ச்சியான பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள். முத்ரா நடன அகாடமி நேர்த்தியான பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டத்தால் பார்வையாளர்களை கவர்ந்தது, அதே நேரத்தில் லோகா, தி டான்ஸ் கலெக்டிவ் மகாகாளி கீர்த்தனம் மற்றும் ஐயப்ப ஸ்துதி போன்ற தெய்வீக இசையமைப்புகளை வழங்கி, ஆழ்ந்த ஆன்மிக ஆர்வத்தைத் தூண்டியது. இந்த விழாவில் ஸ்ரீ சக்தி அகாடமியைச் சேர்ந்த கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கதக்கின் தாள நயமும், கிருஷ்ண வந்தனம் மற்றும் சல் பிருந்தாவனம் போன்ற அற்புதமான படைப்புகளும் பார்வையாளர்களை கிருஷ்ணரின் புராண பூமிக்கே அழைத்துச் சென்றன. மேற்கு வங்காளத்திலிருந்து துர்கா பூஜையின் மகத்துவத்துடன் தொடர்புடைய மயக்கும் துனுச்சி நடனம், நிகழச்சியை மேலும் மெருகேற்றியது. ஹரி ஓம் நடன சங்கம் அவர்களின் வசீகரிக்கும் குச்சிபுடி மற்றும் சிவ தாண்டவ நிகழ்ச்சிகளால் விழாவை மேலும் வளப்படுத்தி, பார்வையாளர்களை தெய்வீக சிந்தனையுடன் தாளம் போட வைத்தனர். ஒரு பிரமிக்க வைக்கும் கேரள நாட்டுப்புற கலை சுவரோவியம் இந்த விழா கேரளாவின் துடிப்பான கலைத்திறனை டி'அகுய்லர் தெருவிற்கு கொண்டு வந்தது, அங்கு ஒரு அற்புதமான 7 மீட்டர் உயர சுவரோவியம் கேரளாவின் பாரம்பரிய நாட்டுப்புற கலையை காட்சிப்படுத்தியது. துடிப்பான வண்ணங்களுக்கு பெயர் பெற்ற அந்த தலைசிறந்த படைப்பு, ஹாங்காங்கின் தனித்துவமான இயற்கைக் காட்சிக்கு இணையான ஒரு இந்திய படைப்பாக காணப்பட்டது. பார்வையாளர்கள் இது தொடர்பாக நடைபெற்ற பட்டறையில் பங்கேற்று, இந்த தனித்துவமான கலை வடிவத்தின் வரலாறு, அதன் முக்கியத்துவம், பாரம்பரிய ஓவிய முறைகமில் ஆர்வம் காட்டினர். பராத்-பாணி ஊர்வலம் & ஹோலி பண்டிகைகள் பராத்-பாணி ஊர்வலத்துடன் திருவிழா உச்சகட்டத்தை எட்டியது; அதில் ஒரு மணமகனும், மணமகளும் தேசி பஜார் வழியாக மகிழ்ச்சிகரமான அணிவகுப்பை வழிநடத்தினர். அப்போது இசைக்கப்பட்ட இந்திய இசையால் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள், நடனமாடி, இந்திய உணர்வைக் கொண்டாடினர். ஹோலியின் பண்டிகை உணர்வுடன் நடைபெற்ற அந்த ஊர்வலத்தில், வண்ணமப் பொடி தூவலும் உற்சாகமும் ஒன்று சேர்ந்து, அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. இந்திய கலாச்சாரத்தின் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தை இந்த வியக்கத்தகு இந்திய விழா வெற்றிகரமாக வெளிப்படுத்தியது; இசை, நடனம், கலை மற்றும் சமையல் மகிழ்ச்சிகளின் தனித்துவமான கலவையை வழங்கியது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, இந்தியாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் சாரத்தை ஹாங்காங்கின் மையத்திற்கு கொண்டு வந்த ஒரு மறக்க முடியாத காட்சியையும் உருவாக்கியது. விழா நிறைவடைந்தவுடன், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு, இதுபோன்ற கலாச்சார பரிமாற்றங்களுக்கான தேவையை எடுத்துக்காட்டுகிறது, இது ஹாங்காங்கில் இந்தியாவின் வளமான மரபுகளின் எதிர்கால கொண்டாட்டங்களுக்கு வழி வகுக்கிறது. - நமது செய்தியாளர் டாக்டர் மெய். சித்ரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !