இன்னலுற்ற மக்களுக்கான உதவி
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் 02-12-2024 வரோதாய நகர் கிராம சேவகர் பிரிவில் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வருமானம் இன்றி அல்லல் படும் 38 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்ச்சியில் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜெகதீசனுடன் ரொட்டறி கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டதுடன் நிவாரணப் பொருட்களளையும் வழங்கி சிறப்பித்தார்கள். இதற்குரிய அனுசரணையை திருகோணமலை ரோட்டரி கழகத்துடன் இணைந்து, அவுஸ்திரேலியாவை சேர்ந்த விக்கனராஜா வழங்கினார் - நமது செய்தியாளர் ஜி.குணாளன்