உள்ளூர் செய்திகள்

இஸ்ரேலில் இந்திய - இஸ்ரேல் வர்த்தக பேரவை கூட்டம்

இஸ்ரேலில் இந்திய - இஸ்ரேல் வர்த்தக பேரவை கூட்டம்டெல் அவிவ் :இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் இந்திய - இஸ்ரேல் வர்த்தக பேரவை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.அவர் பேசும்போது, இந்திய -இஸ்ரேல் வர்த்தக உறவு சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும்.குறிப்பாக ரத்தின கற்கள் மற்றும் நகை துறையில் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.இதனையடுத்து இந்திய வைர வியாபாரிகளை சந்தித்து பேசினார்.அப்போது இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.--- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !