உள்ளூர் செய்திகள்

AEDU-UK குழுவின் திருகோணமலை வருகை

AEDU-UK திட்டத்தின் மூலம் உதவி பெறும் பாடசாலை மாணவர்களின் 13 வது வருட ஒன்றுகூடல், மூதூரில் உள்ள புனித அந்தோணியார் பாடசாலையில் நடைபெற்றது. AEDU-UK குழு சார்பில் வைத்திய கலாநிதி அமிர்தலிங்கம் பகீரதன், ஈசன் சோமசுந்தரம் மற்றும் ஜேர்மனியில் இருந்து மாவை சோ தங்கராஜா மற்றும் இலங்கை ஒருங்கிணைப்பாளர் வரதன் திருகோணமலை ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி குணாளன், .ஆன்டனி ரவீந்திரன் (உதவி பணிப்பாளர் - கல்வி) ஆகியோர் அடங்கிய குழுவினர் சுமார் 100 திருகோணமலைச் பாடசாலை மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சந்தித்தார்கள். திருகோணமலை ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி குணாளன் அனைவரையும் வரவேற்று, இந்த உதவித்தொகையை எவ்வாறு பயன்படுத்தி அவர்களின் படிப்பை மேம்படுத்துவது என்பது குறித்து பயனாளிகளுக்கு விளக்கினார். இலங்கை ஒருங்கிணைப்பாளர் வரதன், மாவை சோ தங்கராஜா, வைத்திய கலாநிதி. அமிர்தலிங்கம் பகீரதன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, படிப்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புற மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களின் தற்போதைய சூழ்நிலையில் இருந்து கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம். அவர்களின் படிப்பில் அதிக முன்னேற்றம் இருப்பதை நாங்கள் கவனித்தோம் மற்றும் எமது முதலீடு வீணாகாது என்ற நம்பிக்கையை எங்களுக்கு தந்திருக்கிறது. எங்கள் ஆரம்ப உள்ளீடு நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்த முடிவுகளைக் காண்பிக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம். AEDU-UK ஆனது 75 இலட்சம் ரூபாயை மொத்தமாக 750க்கு மேற்படட வடக்கு, கிழக்கு, மொனராகலை முதல் நுவரெலியா உட்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் மத்தியில் உதவி புரிகிறது. - நமது செய்தியாளர் ஜி.குணாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்