மண்டூர்கந்தசுவாமி ஆலயம்
இலங்கையின் கிழக்கிலங்கையில் பண்டைக் காலம் முதல் தனக்கருகில் உள்ள பல ஊர்களை ஒன்றிணைத்து தேசத்துக் கோயிலாக விளங்கி வரும் மண்டூர் கந்தசுவாமி ஆலயம். இயற்கை எழிலும், பழமையின் சிறப்பும், அமைதியும் நிறைந்த ஆலயத்தின் வெளிச்சுற்று வளாகத்தில் காணப்பட்ட பராமரிப்பில்லாது விடப்பட்டுள்ள பல கட்டடங்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.அவை முன்னர் அத்தேசத்துக் கோயிலுக்கு வருகை தரும் அடியவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட மடங்களாகும். புகைப்படத்தில் ஒரு ஊரவர் தங்கும் மடம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல மடங்கள் ஆலய வளாகத்தைச் சூழ அமைக்கப்பட்டுள்ளது. எமது முன்னோர்கள் உருவாக்கிய இந்நடைமுறை பல்வேறு சமூகநல அனுகூலங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மீகக் காரணங்களுக்கு அப்பால் நீண்ட தொலைவிலுள்ள மக்களை ஒன்றிணைக்கும் மையமாகவும், கலை கலாச்சார, பண்பாட்டு அம்சங்களைப் பாதுகாக்கும் அமைப்பாகவும் வர்த்தகம், அரசியல் என்பனவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை உருவாக்கவல்ல நிறுவனமாகவும் இத்தேசத்துக்கோயில்கள் நீண்ட காலமாக செயற்பட்டு வந்திருக்கிறமையை ஆதாரப்படுத்தும் வரலாற்று ஆதாரமாக அக்கட்டிடங்கள் காட்சி தருகிறது.- நமது செய்தியாளர் ஞனகுணாளன்