இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கல்லிடைக்குறிச்சி முனைவர் முகமது முகைதீனுக்கு விருது
இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் குராய்டன் தமிழ் சங்கம் நடத்திய உலகளாவிய சாதனை படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கும்விழா நடைபெற்றது.உலகெங்கும் உள்ள தமிழர்களை இணைத்து தனது தேசியக் கல்வி அறக்கட்டளை அமைப்பின் மூலம் இணையவழியில் கருத்தரங்க நிகழ்வை நடத்தி தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சாரத்தினை பரப்பி வரும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீனுக்கு “செந்தமிழ் சான்றோர்” என்ற விருதினை குராய்டன் மாநகரின் துணை மேயர் முகமத் இஸ்லாம் வழங்கினார். இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர் நடாசா அயர்ன்ஸ், குராய்டன் தமிழ் சங்க தலைவர் அப்பு தாமோதரன் , சென்னை ஆ.கோ.மோ தமிழ் ஆய்வு மையத்தின் இயக்குனர் பாட்டழகன், விஜிபி தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம், கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக பேராசிரியர் சிவா பிள்ளை, நார்பரி பார்க் மாமன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்தனர்.தமிழ் எழுத்தாளர்களை உலகளாவிய ரீதியில் இணைக்கும் 'நடவு', வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் (NATAWO) அமைப்பில் அமீரக உலகத் தூதுவராக முனைவர் முகமது முகைதீன் அவர்கள் இலக்கியத் தொண்டாற்றி வருகிறார். - நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்