மகரிஷி பரஞ்ஜோதியார் ஜெர்மனி -ஐரோப்பா விஜயம்
ஓருலக சமதர்ம சமத்துவ இறையாட்சி - ஓர்இறை - ஒரே நாணயம் - எந்நாட்டு விளைவானாலும் எல்லோரும் நிர்வகிக்கும் உரிமை - போரற்ற உலகம் - பிணியற்ற வையகம் - பசியற்ற சமுதாயம் அமைய இயக்கம் நடத்தி வரும் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர்ஞான பீடாதிபதி - ஸ்வர்ண ஆகர்ஸண பொற்கலச பிரணவாலயப் பேராசான் - உலக அமைதித்தூதர் ஜெகத்குரு மகாமகரிஷி குருமஹான் பரஞ்ஜோதியார் ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 26 வரை ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து பல்வேறு ஆன்மிகப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்பிரான்க்போர்டு விமான நிலையத்தில் இந்தியரல்லாதோர் உள்ளிட்ட அவர்தம் சீடர்கள் பெருமளவில் திரண்டு பூரண கும்ப மரியாதை அளித்து - பூச்செண்டு வழங்கி மகத்தான வரவேற்பு நல்கினர். சிரியாவிலுள்ள ஐ.நா.அலுவலக உயரதிகாரி ராஜா ஆறுமுகம் அலைபேசிவழி குருமஹானிடம் ஆசிபெற்றதோடு விரைவில் ஐ.நா.வில் உரையாற்ற வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார். பிரான்க்போர்டு, சூரிச், ஸ்விட்ஸர்லாந்து உள்ளிட்ட நகரங்களில் தீட்சை வழங்கல். அகதவப்பயிற்சி, ஆழ்நிலை தியானம், சர்வ சக்தி சித்தி மஹா யக்ஞம், குரு பிரவேசம், சத்சங்கம் நடத்தவுள்ளார். மலை உச்சியில் நடைபெற்ற மலைப்பொழிவு உரையும் கடற்கரைத் தியானத்தில் வழங்கிய அருளாசியுரையும் ஜெர்மனிவாழ் சீடர்கட்குப் பெருவிருந்தாக அமைந்தது. நவம்பர் 11 - 11.11 மணிக்கு நடைபெறவுள்ள உலக அமைதிக்கான உலக அளவிலான பிரார்த்தனை பற்றியும் விளக்கப்பட்டது. ஜெர்மனி யாத்திரையை நிறைவு செய்து லண்டனிலுள்ள நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளார். - தினமலர் வாசகர் தமிழ்க்கோ