ஜெர்மனியில் நவராத்திரி
ஜெர்மனியில் உல்ஸ்பர்க் உட்பட பல நகரங்களில் குஜராத்தி சமாஜம் சார்பில் நவராத்திரி கொண்டாடப்பட்டது. இதில் ஆண்களும் பெண்களும் பெருமளவில் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுகின்றனர். இந்த விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.