இலண்டன் புத்தக கண்காட்சியில் ஷார்ஜா புத்தக ஆணையம் பங்கேற்பு
இலண்டன் : இலண்டனில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் ஷார்ஜா புத்தக ஆணையம் பங்கேற்றது. இந்த கண்காட்சியில் அமீரக எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் அமீரக கலாச்சாரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். மேலும் ஐரோப்பிய நூல் வெளியீட்டாளர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது.- நமது செய்தியாளர் காஹிலா