உள்ளூர் செய்திகள்

இரெடிங்க தமிழ்ச் சங்கத்தின் முதல் பேட்மின்டன் போட்டித் தொடர்

இரெடிங்க் தமிழ்ச் சங்கம் சார்பாக, ஐக்கிய அரசாங்கம் (UK), உட்ஃபோர்ட் பார்க் இலீஷர் சென்டர், ஊட்லியில் (Woodford Park Leisure Centre Woodley) RTS பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி முதன் முறையாக நடத்தப்பட்டது. இப்போட்டிக்கு தெற்கு இங்கிலாந்து முழுவதிலிருந்தும் 20 ஆண்கள் அணிகள், 8பெண்கள் அணிகள் என்று மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். சிறப்பான முயற்சி இரெடிங்க் தமிழ்ச்சங்கத்தின் முன் முயற்சியால் இப்போட்டிகள் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பால் சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. குறிப்பாக கவிதா மகேஷ், ஷோபனா கார்த்திக் ஆகியோர் தொடக்க காலம் தொட்டே தமது உழைப்பைத் தந்து இப்போட்டி நிகழ்வு வெற்றிபெற உறுதுணையாக நின்றனர். புரவலர்கள்: VCP Tuition Reading & Milton Keynes, A & R Solicitors England அருண்குமார் நடராஜன், Badminton Coach போன்ற தோழமைகள் தங்கள் ஆதரவுகளோடு ஒத்துழைப்பு நல்கினர். வென்றோர் பட்டியல் பெண்கள் இரட்டையர்: பௌஷாலி பேரா, தீப்தி ராவ்- வெற்றி , பரிசு: £100 உடன் RTS வெற்றிக் கேடையம் மற்றும் பயிற்சியாளர் அருண்குமார் நாகராஜிடம் ஒரு மணிநேர இலவசப் பயிற்சி பிரிந்தா ராஜ்மோகன், ஜூடித்- இரண்டாமிடம், பரிசு: £50, உடன் RTS வெற்றிக் கேடையம் ஆண்கள் இரட்டையர்: சேயோன் சுரேந்திரன், பிரசன்னா கண்ணன்- வெற்றி, பரிசு: £100 உடன் RTS வெற்றிக் கேடையம் மற்றும் பயிற்சியாளர் அருண்குமார் நாகராஜிடம் ஒரு மணிநேர இலவசப் பயிற்சி இரவிசங்கர் ராஜ்மோகன், கமரன் அலுவாலியா- இரண்டாமிடம், பரிசு: £50 உடன் RTS வெற்றிக் கேடையம் எழுதியவர்: ஸ்ரீனிவாசன், அனுமந்தன் & கணேசன், பதிவு : Ganesan Krishnamoorthy (Co-founder and Director of RTS) https://readingtamilsangam.org/ https://find-and-update.company-information.service.gov.uk/company/14993418


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்