உள்ளூர் செய்திகள்

குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் நடத்திய இசைவிருந்து

குவைத் நகரின் DPS பள்ளி அரங்கில், பிப்ரவரி7ஆம்தேதி, தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம்(TEF) நடிகை ஆண்ட்ரியாவின் இசைவிருந்து நிகழ்ச்சியை பெருமையுடன் நடத்தியது. நிகழ்ச்சி சரியாக மாலை 5:45மணிக்கு, குவைத் தேசியகீதம் மற்றும் இந்திய தேசியகீதம் ஒலிக்க, TEF மகளிர் பிரிவினர் குத்து விளக்கை ஏற்ற இனிதே ஆரம்பமானது. தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமத்தின் வழக்கப்படி, சுரேஷ்ஆனந்த் பாதுகாப்பு குறிப்புகள் (Safety moments) வழங்க, ராஜ்நாராயணன் திருக்குறள் வாசித்தார். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றி, இந்த ஆண்டு இதுவரை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்தார். தலைவர் ராஜா தனது உரையில் வரும் மாதங்களில் வரவிருக்கும் நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டினார். டிவி கலைஞர் குரேஷி, நகைச்சுவை மற்றும் பலகுரல் நிகழ்த்தி உற்சாகமூட்டினார், தமிழ்ப் பின்னணிப் பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் தனது ஆத்மார்த்தமான மெல்லிசை பாடல்களால் பார்வையாளர்களை மெய்மறக்க வைத்தார். நிகழ்வின் முத்தாய்ப்பாய் நடிகை ஆண்ட்ரியா ஜெரமியா தனது இன்னிசை பாடல்களுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களுக்கு இசைவிருந்து படைத்தார். இது அங்கு இருந்த அனைவருக்கும் மறக்க முடியாத இசைஅனுபவமாக அமைந்தது. குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் குழும நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். ஜெம்பிரசன்னா நிகழ்ச்சியை நேர்த்தியான முறையில் தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் சுப்பிரமணியன் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் அற்புதமான மற்றும் சுவையான இரவுஉணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சி இசைஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விருந்தாக அமைந்தது. - நமது செய்தியாளர் செல்லத்துரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !