ஓமன் இந்திய பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், மாணவர்களுடன் தூதர் கலந்துரையாடல்
மஸ்கட் : ஓமன் நாட்டின் புரைமி பகுதியில் உள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் இந்திய தூதர் அமித் நாரங் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் தனித்தனியே கலந்துரையாடல் செய்தார். ஆசிரியர்கள் மத்தியில் பேசிய அவர் மாணவர்களின் திறமையை கண்டுபிடித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றார். மாணவ, மாணவியருடன் உரையாடும்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார். பள்ளிக்கூட விரிவாக்க திட்டத்திற்கு உதவியளிக்கப்படும் என கூறினார். - நமது செய்தியாளர் காஹிலா