குவைத்தில் மரணித்த தூத்துக்குடி நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டு அனுப்பி வைப்பு!
குவைத்தில் Al Dhow என்ற தனியார் கம்பெனியில் Safty Officer ஆக பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் மனத்தி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் குமரேசன் 16 .12. 2024 மாலையிலிருந்து குடும்பத்துடன் எந்த விதமான தொடர்பும் இல்லை என்ற தகவலை குமரேசனின் குடும்பத்தார் தெரிவிக்க, குவைத்தில் அனைவராலும் அறியப்பட்ட சமூக சேவகரும், இந்தியன் பிரன்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் செயலாளர் கீரணி மதியைத் தமிழக அரசு தொடர்பு கொண்டு குமரேசன் பற்றிய விவரங்களை சொல்லி அவர் பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. மதி உடனே அவர் சம்பந்தப்பட்ட விவரங்களை மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் அதிகாரிகள் நண்பர்கள் என அனைவரிடமும் விசாரித்ததில் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை இறுதியாக குவைத்தில் சமீபத்தில் இறந்தவர்களின் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு சென்று இறந்தவர்களின் விவரங்களை பார்க்கும் பொழுது குமரேசன் கடந்த 16ஆம் தேதி சாலை விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது உடனே மதி அதை தமிழக அரசுக்கும் அந்த குடும்பத்தினருக்கும் தெரிவித்து, குமரேசனின் உடலை அவரின் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான வேலைகளை துரிதப்படுத்தி 12 மணி நேரத்திற்குள் முடித்து 24.12.2024 அன்று குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான மனத்தி கிராமத்திற்கு க்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது அனைத்து வேலைகளையும் கீரனி மதி, அலி பாய், பொறியாளர் ராஜா விரைந்து முடித்தனர். இறந்த குமரேசனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. அவருக்கு மனைவி ரஞ்சனி (36) ஒன்றரை வயது மகன் பிரனேஷ் தங்கா உள்ளனர். - குவைத்திலிருந்து V.சுப்பு