பரீட்சைக்கு தயாரான மாணவர்களுக்கு வாழ்த்து
சாய்ந்தமருது : சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இவ்வருடம் (2025) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் டீ.கே.எம். சிராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாணவர்கள் தங்கள் பரீட்சையை சுமுகமாக எழுதுவதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்க வேண்டி, பாடசாலையின் ஆசிரியர் மௌலவி எம்.ஏ. அறூஸ் அவர்களால் விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் அவர்களால் அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை தரம் 05 பகுதித் தலைவர் எம்.சி.ஏ. மாஹிர், பிரதி பகுதித் தலைவர் டி.எம்.கே. மௌசீன் மற்றும் தரம் 05 மாணவர்களின் பெற்றோர்களினதும் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா மலீக் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக பாடசாலையின் EPSI இணைப்பாளரும் ஆரம்பப் பிரிவு கடமை நிறைவேற்று உதவிக் கல்விப் பணிப்பாளருமான மௌலவி ஏ.எல்.எம். ஜஹாங்கீர், ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஐ.எல்.எம். நசீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததனர். பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், தரம் 05 மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.- நமது செய்தியாளர், காஹிலா.