மஸ்கட்டில் இந்திய தொழிலாளர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி
மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். அப்போது இந்திய தொழிலாளர்கள் சிலர் சம்பளம் வழங்காமை, பாஸ்போர்ட் புதுப்பித்தலில் உள்ள காலதாமதம்உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர். ஒரு சில குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக உதவித்தொகை கோரி கோரிக்கை விடுத்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா