உள்ளூர் செய்திகள்

ஓமனில் இந்திய கடற்படை கப்பல்கள் ; சிறப்பான வரவேற்பு

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ். சென்னை, துசி மற்றும் தீபக் ஆகிய கப்பல்கள் வந்தன. அந்த கப்பல்களுக்கு ஓமன் நாட்டின் கடற்படை சார்பில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர் இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியர் கப்பலை பார்வையிட வந்தனர். அவர்களுக்கு கப்பல்களின் பல்வேறு பகுதிகள் குறித்து அதிகாரிகள் விவரித்தனர்.--- ஓமனில் இருந்து நமது தினமலர் நிருபர் காஹிலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்