உள்ளூர் செய்திகள்

ரியாத் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - நியு செனைய கிளை நடத்திய இரத்ததான முகாம்

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - நியு செனைய கிளை மற்றும் கிங் சவூத் மெடிக்கல் சிட்டி நடமாடும் இரத்த வங்கி இணைந்து நடத்திய 24 வது மாபெரும் இரத்ததான முகாம் 24/01/2025 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடமாடும் இரத்த வங்கியில் நியூ செனையா இஸ்லாமிய அழைப்பு மைய வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது . இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக நியூ செனைய இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மைய தமிழ் பிரிவு மெளலவி அஷ்செய்க். முஹம்மது ரமீஸ் வருகை தந்து முகாமை தொடங்கி வைத்தார் இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் தொடர் அழைப்பு பணியாலும் ரியாத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர். குருதி வழங்கிய அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஜூஸ் மற்றும் பழங்களுடன் பரிசு பை வழங்கப்பட்டது. முகாம் வெற்றிகரமாக நடைபெறுவதற்காக களப்பணியாற்றிய காலை , மதிய உணவு, தேனீர், பழரசம், தண்ணீர் பழங்கள் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து தந்த, வாகன ரீதியாக உதவி செய்த , ஊடக ரீதியாக உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் , மருத்துவமனை ஊழியர்களுக்கும் மேலும் இந்த முகாம் எல்லா வகையிலும் சிறக்க உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மருத்துவ அணி உள்ளிட்ட இதர அணி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். - தினமலர் வாசகர் ஷாஜஹான் யான்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !