உள்ளூர் செய்திகள்

மஸ்கட்டில் வருமான வரி தொடர்பான கருத்தரங்கு

மஸ்கட் : மஸ்கட்டில் ஓமன் பட்டய கணக்காளர் சங்கத்தின் சார்பில் வருமான வரி தொடர்பான சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கின் மூலம் இந்திய சமூகத்தினருக்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பது தொடர்பாக விவரிக்கப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார். அவருக்கு பட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.ஓமன் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று சிறப்பித்தனர்.- நமது செய்தியாளர், காஹிலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !