உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் வீர ஹனுமான் கொலு

வீர ஹனுமான் கொலுஇந்த ஆண்டின் எங்கள் கொலுவின் முக்கிய கருப்பொருள் “ஹனுமான் & ராமாயணம்”. என் மகன் கவின் காசி அருணாச்சலம், 16 வயது. பீனிக்ஸ், அரிசோனாவில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உருவாக்கிய “வீர ஹனுமான்” குறும்படம் இந்த வருட கொலுவின் சிறப்பாக அமைந்தது. குறும்படத்தில் ஹனுமானின் வீரமும், பக்தியும் அற்புதமாக வெளிப்பட்டது.???? Veera Hanuman Short Movie - YouTube:https://www.youtube.com/watch?v=7IFVS9IKt7Qநானும் எனது பங்களிப்பாக ஒரு ஹனுமான் சிலையை ஒலி மற்றும் ஒளி (Sound & Light Show) வடிவில் உருவாக்கினேன். அதில் ஒரு பொத்தானை அழுத்தினால், ஹனுமான் தன் மார்பைத் திறந்து உள்ளே ராமரும் சீதையும் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பின்னணியில் தமிழ் குரலில் ஹனுமானின் பக்தி உரை ஒலித்தது — இது சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது.10 நாட்களும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து கொலுவைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் வீட்டில் தயாரிக்கப்பட்ட இரவு உணவை பிரசாதமாக பெற்றனர். பக்தியோடு, உற்சாகத்தோடு, அனைவரும் கலந்து கொண்ட இந்த விழா பீனிக்ஸ் நகரில் நவராத்திரியின் ஆனந்தத்தைப் பரப்பியது.இந்த ஆண்டு பீனிக்ஸில் மட்டும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்திருந்தனர். எங்கள் குடும்பம் மட்டும் 25க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்று, ஒவ்வொரு வீட்டின் தனித்துவமான கொலு வடிவமைப்புகளையும் ரசித்தோம்.2024ல், “பக்த ப்ரகலாதன் 4D ஷோ” எனும் நிகழ்ச்சியில், ஹோலோகிராம், காற்று, புகை விளைவுகள் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பக்தியின் பெருமையை வெளிப்படுத்தினார் கவின்.???? Bhakta Prahaladan 4D Show - YouTube:https://www.youtube.com/watch?v=F4Cfx5S9O4Q2023ல், முழு நவராத்திரியும் “ராமாயணம் Puppet நாடகம்” தினமும் நேரலையில் நடத்தப்பட்டது. கவின் Puppet இயக்கம், ஒலி கட்டுப்பாடு, பின்னணி மாற்றம் ஆகிய அனைத்தையும் தனியாகச் செய்து, 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார்.???? Ramayana Puppet Show - YouTube:https://www.youtube.com/watch?v=_rdZ9_4M7Cg2022ல், “காளிங்க நர்த்தனம் Puppet Show” மூலம் ஹனுமானுக்கு முன்பான கிருஷ்ண அவதாரத்தின் கதை சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது.???? Kalinga Narthanam - YouTube:https://www.youtube.com/watch?v=cXO2m5rJgtY&t=11sஎன் மகனைப் போலவே, நானும் சில ஆண்டுகளாக ஒவ்வொரு நவராத்திரியிலும் Sound & Light Shows வடிவமைத்து வருகின்றேன்.இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும் எங்கள் குடும்பம் நவராத்திரியை பக்தியுடன், படைப்பாற்றலுடன், கலாசார மரபை புதுமையாகப் பரப்பும் விழாவாக கொண்டாடி வருகிறது.அடுத்த தலைமுறை குழந்தைகள் இப்படிப் பாரம்பரியத்துடன் வளர்ந்து, நம் மத மற்றும் கலாச்சாரத்தை பெருமையுடன் தாங்கி செல்கின்றனர் என்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.பக்தியால் பூரணமான இதயங்களும், பாரம்பரியத்தின் ஒளியால் பிரகாசிக்கும் வீடுகளும் — இதுவே நவராத்திரி 2025 கோலுவின் உண்மையான சிறப்பு- - அரிசோனாவில் இருந்து காசி அருணாச்சலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்