sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

கடகம்

/

கடகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

மாத ராசி பலன் : கடகம்
11 மார் 2024

முந்தய மாத ராசி பலன்

rasi

கடகம்புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம், குரு பகவானின் பார்வைகள் பொருளாதார நிலையை உயர்த்தும். குடும்பத்தில் நிம்மதியான சூழலை ஏற்படுத்தும். சந்தோஷத்தை அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.  எதிரிகளால் உண்டான சங்கடங்களை விலக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய் இணைந்திருப்பதால் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒன்றிலும் அவசரகதி என்பது இந்த மாதத்தில் வேண்டாம். உடல் நிலையில் அக்கறை அவசியம். அலுவலகப் பணியில் நெருக்கடிகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனமாக செயல்படுவதால் சங்கடங்கள் தோன்றாமல் போகும். வியாபாரம், தொழிலில் எதிர்பாராத சங்கடங்கள், போட்டிகள் ஏற்படலாம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக சதிகள் புரியலாம் என்பதால் விழிப்புணர்வு மிக அவசியம். பெண்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் கொள்வதுடன் வாழ்க்கைத் துணையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய முதலீடுகள் முயற்சிகள் என்பது இந்த மாதத்தில் வேண்டாம். பழைய செயல்களிலும் நிதானம் அவசியம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்முன் முழுமையாக படித்துப் பார்த்து அதன் பிறகே கையெழுத்திட வேண்டும். விவசாயிகளுக்கு விளைபொருட்களை விற்பதில் சில சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போகும். பணியாளர்கள் தங்கள் வேலையில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் பிரச்னைகள் உண்டாகலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஏப். 5,6.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20,21,29,30, ஏப். 2,3,11,12
பரிகாரம்: அம்மன் வழிபாடு அல்லல் போக்கி நலம் சேர்க்கும்.

பூசம்: சர்வ சக்திக்கும் காரகனான சனி, அறிவுக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் சில நெருக்கடிகளை சந்திக்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதுடன், பூர்வ புண்ணியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானும் அங்கு இணைவதால் உங்கள் அந்தஸ்திற்கும் செல்வாக்கிற்கும் இது சோதனைக்காலமாக இருக்கும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடி வரக் கூடும் என்பதால் எந்த ஒன்றாக இருந்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவும். வழக்கமான செயல்களிலும் தடைகள், தாமதங்கள் என்று ஏற்படக்கூடும் என்பதால் நிதானம் அவசியம். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில சங்கடங்களை, வழக்கினை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருந்தாலும் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் எல்லாவித சங்கடங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். உங்களுடைய முயற்சிகள் வெற்றியளிக்கும். பாக்கிய ஸ்தானத்தில் உங்கள் தனாதிபதியும் ராகுவும் இணைவதால் எதிர்பார்த்த வரவு உண்டாகும். தெய்வ அருளால் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் லாபம் உண்டாகும். அந்நியர்கள் வழியே ஆதாயம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படும் காரியங்களில் லாபம் அடைவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிர பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நினைத்ததை உங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். பெண்கள் தங்கள் செயல்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது. அலுவலக பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவதால் சங்கடங்களில் இருந்து விடுபடலாம். புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர். வாழ்க்கைத் துணையின் நலனில் இந்த மாதம் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். விவசாயிகள் எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். விளைபொருளை விற்பதிலும் யோசித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் அதிருப்திக்கு இடமிருக்காது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: ஏப்.6,7
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,20,26,29. ஏப். 2,8,11
பரிகாரம்: நவகிரக வழிபாடு எதிர்பாராத நன்மையை உண்டாக்கும்.

ஆயில்யம் ; கல்விக்காரகனான புதன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, அனைத்தையும் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் இயல்பாக இருக்கும். சரி என்று பட்டதை துணிச்சலாக செய்திடக் கூடியவர்கள். வாதிடக் கூடியவர்கள் நீங்கள். இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மறுபக்கம் அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சஞ்சரித்தாலும் அது உங்களுக்கு மறைவு ஸ்தானம் என்பதால் பெருமளவில் நெருக்கடி ஏற்படாமல் போகும். இருந்தாலும் ஒவ்வொன்றிலும் கவனமாக செயல்படுவதன் வழியாக உங்கள் செயல்கள் நிறைவேறும். வியாபாரம், தொழில் அபிவிருத்தியாகும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், ராகுவின் பார்வைகள் மூன்றாம் இடத்தில் பதிவதால் அரசுவழி முயற்சிகள் வெற்றி பெறும். வருமானம் பல வழியிலும் வரக் கூடும். தடைபட்ட முயற்சிகள் நிறைவேறும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். பெண்கள் வாழ்க்கைத் துணையின் எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்படுவதால் குடும்பத்தில் சங்கடமில்லாமல் போகும். உடல்நிலையிலும் கூடுதல் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் விழிப்புணர்வு அவசியம். இல்லையெனில் அதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாக நேரும். இந்த மாதத்தில் புதிய முயற்சிகள், சொத்து சேர்க்கை போன்றவை வேண்டாம். விவசாயிகள் கூடுதல் கவனமுடன் செயல்பட்டால் சங்கடங்கள் குறுக்கிடாது. அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் வேறு சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: ஏப். 7,8.
அதிர்ஷ்ட நாள்: மார்ச்14,20,23,29, ஏப்.2,5,11
பரிகாரம்: விநாயகரை சதுர்த்தியன்று வழிபட வினைகள் தீரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us