மாத ராசி பலன்
மாத ராசி பலன் : கடகம்
13 ஜூன் 2026
முந்தைய மாத ராசி பலன்

கடகம்
கடகம்
புனர்பூசம் 4 ம் பாதம்
எதிர் வருவதை முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல் படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்குள் ஞானக்காரகன் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் அறிவு மேம்படும். எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். வசதி வாய்ப்புகளை அடைவதற்காக முயற்சி மேற்கொள்வீர். அதன் காரணமாக சோர்ந்திருந்தவர்களும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரம் தொழிலை விரிவு செய்வதற்காக ஊர் விட்டு ஊர் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என்றாலும், குரு பகவானின் பார்வைகள் பூர்வ புண்ணிய, சப்தம, பாக்ய ஸ்தானங்களுக்கு உண்டாவதால் எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நடந்தேறும். பூர்வ புண்ணிய பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்யத்திற்காக தவம் இருந்தவர்களுக்கு வரம் கிடைத்ததுபோல் நல்ல தகவல்வரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். சொந்த வீடு வாகனம் என்ற கனவோடு இருந்தவர்களுக்கு அந்தக் கனவு நனவாகும். சமூகத்தில் அந்தஸ்து மரியாதை கௌரவம் உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பொருளாதார நிலை உயரும். சண்டை சச்சரவுகளால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒரே வீட்டிற்குள் வாழக்கூடிய அளவிற்கு நிலை மாறும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து படிப்பில் அக்கறை கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: ஜூலை 4.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 21, 29, 30. ஜூலை 2, 3, 11, 12.
பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.
பூசம்
எந்த ஒன்றிலும் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை 30 ஆண்டுகள் கெட்டவரும் இல்லை என்ற வார்த்தையை உங்களுக்கு உணர்த்தப் போகிறார். அதிர்ஷ்டக் காற்று உங்களை நோக்கி வீசும். நீங்கள் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். தெய்வ அருளும் விஐபிகள் ஆதரவும் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். பாக்ய சனியின் பார்வைகள் 3, 6, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். நோய் நொடி வம்பு வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஆச்சரியப்படும் வகையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஜூன் 19 முதல் உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். கையில் பணம் புரளும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி உருவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 4, 5.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 20, 26, 29. ஜூலை 2, 8, 11.
பரிகாரம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
ஆயில்யம்
குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவுடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். வித்தியா காரகன் புதன் விரய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்துள்ள நிலையில், உங்கள் லாபாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். ஆடை ஆபரணம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலை மீதிருந்த பயம் போகும். செய்து வரும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குரு பகவானின் பார்வைகள் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும் என்றாலும், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. இக்காலத்தில் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், அனுசரித்துச் செல்வதும் நன்மையை ஏற்படுத்தும். தவறான நபர்களை நம்பி எந்த விதமான முயற்சியிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் வழியாக நீங்கள் உணரக்கூடிய நிலை உருவாகும் என்பதை மனதில் வைத்து செயல்படவும். வெளிநாட்டு முயற்சிகளிலும் புதிய முதலீடுகளிலும் நிதானம் தேவை. பெண்கள் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 5.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29. ஜூலை 2, 11, 14.
பரிகாரம்: பார்த்தசாரதியை வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும்.