மாத ராசி பலன்
மாத ராசி பலன் : கடகம்
16 ஜூலை 2026
முந்தைய மாத ராசி பலன்

கடகம்
கடகம்; புனர்பூசம் 4 ம் பாதம்
நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்ந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தன, புத்திர காரகனான குரு ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் வீண் அலைச்சல் குறையும். வேலையின் காரணமாக தான் ஒரிடம் குடும்பம் வேறிடம் என்றிருந்த நிலை மாறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை அவரால் கிடைத்துவந்த யோகப் பலன்கள் மட்டுப்படும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை எல்லாம் சாதித்து வந்த நிலையில் பின்னடைவு உண்டாகும். செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். வருமானத்திலும் பண விவகாரத்திலும் கவனமாக இருப்பது நன்மையாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சூரியன் உங்களுக்குள் பதட்டத்தையும் வேகத்தையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். சங்கடங்கள் அதிகரிக்கும். குடும்பத்திலும் ஒருநேரம் இருப்பது போல் மறுநேரம் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகும். உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிராக மாறும் என்பதால் அனைத்திலும் நிதானமாக இருப்பது நன்மையளிக்கும். புதிய முயற்சிகளை முடிந்தவரை தள்ளி வைப்பது அவசியம். விவசாயிகளுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். பிற்பகுதியில் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவைப்படும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 31.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 21, 29, 30. ஆக. 2, 3, 11, 12.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும்.
பூசம்: தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கு கிடைத்த வந்த நற்பலன்களில் பின்னடைவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களுடன் இடைவெளி ஏற்படும். உடல் நிலையிலும் மனநிலையிலும் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். திட்டமிட்ட வேலைகளிலும் தடைகள் தடுமாற்றங்கள் என்று ஏற்படும் என்றாலும் மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் சிலருக்கு திடீர் வாய்ப்புகள் தேடிவரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். ஆக. 9 முதல் குரு நேர்கதியில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் விலகும். நட்புகளால் ஆதாயம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பொறுப்பு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வர வேண்டிய பணம்வரும். விவசாயிகளுக்கு இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மை அளிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 31. ஆக. 1.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 20, 26, 29. ஆக. 2, 8, 11, 17.
பரிகாரம்: சனிக்கிழமையில் நவகிரகத்திற்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.
ஆயில்யம்: சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஜூலை 31 வரை வித்யா காரகன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். வரவேண்டிய வரவிலும் தடை உண்டாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில் இழுபறி இருக்கும். நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலைகளிலும் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். ஆக. 1 முதல் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். ஆக. 1 வரை உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். அனைத்தையும் சமாளித்து முன்னேற முடியும். எதிர்பாராத நேரத்தில் வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது, ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் ஒரு பிரச்னையை முடித்து நிம்மதி அடையும் நேரத்தில் வேறு ஒரு பிரச்னை உங்கள் முன் வந்து நிற்கும் என்பதால் முடிந்தவரை அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மையை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நன்மையாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன் பின்விளைவுகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம். இக்காலத்தில் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் கலகலப்பான நிலை இருக்கும். நவீன பொருட்கள் சேரும். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். புதிய சொத்து வாங்குகின்ற முயற்சி சிலருக்கு வெற்றியாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஆக. 1, 2.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 23, 29. ஆக. 2, 5, 11, 14.
பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.