மாத ராசி பலன்
மாத ராசி பலன் : கன்னி
15 டிச 2025
முந்தய மாத ராசி பலன்

கன்னி
கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்..: ஆளுமைத்திறன், அறிவாற்றல் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மார்கழி யோகமான மாதம். உங்கள் விரயாதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய வாகனம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் ஈடுபடும் வேலைகளில் தடை, தாமதம் என்று ஏற்பட்டாலும் கடைசியில் வெற்றியே உண்டாகும். எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய முதலீட்டில் இருந்து வர வேண்டிய ஆதாயம் வரும். புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்தின் மீது அக்கறை கொள்வீர்கள். அதற்கான சேமிப்பை உருவாக்குவீர்கள். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயம் செழிப்படையும். விளைச்சல் வழியே எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 29
அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 23, 28. ஜன. 1, 5, 10, 14
பரிகாரம் வீரராகவப் பெருமாளை வழிபட வெற்றி உண்டாகும்.
அஸ்தம்: சாதுரியமும் சாமர்த்தியமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். இதுவரை தடைபட்ட வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடந்தேறும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். முன்னேற்றத்தை நோக்கி நடைபோட வைப்பர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். சிலர் தங்கத்தில் முதலீடு செய்வர். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து அனுபவசாலிகள் பாராட்டுவர். அரசியல்வாதிகளுக்கு புதிய பாதை தெரியும். தொண்டர்களின் பலம் கூடும். பணியாளர்களுக்கு தடைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மாதம் முழுவதும் தன குடும்பாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொன், பொருள் சேரும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைஞர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 30
அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 23, 29. ஜன. 2, 5, 11, 14
பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வழிபட தடை விலகும். முயற்சி வெற்றியாகும்.
சித்திரை 1, 2 ம் பாதம்: உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டு திறமையை வெளிப்படுத்தும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி முன்னேற்றமான மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெறுவதுடன், உங்கள் ஜீவன, லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் செய்யும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைக்க முடியும். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும். டிச. 25 முதல் ராசிநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதை சாதிக்க வேண்டுமோ அதை சாதித்திக்க கூடிய அளவிற்கு உங்கள் செயல்கள் இருக்கும். அதில் வெற்றியும் பெறுவீர்கள். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். சிலர் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் இக்காலத்தை உங்களுக்கு யோக காலமாக மாற்றுவர். நீங்கள் நினைப்பது நடந்தேறும். நடக்கவே நடக்காது என்று கைவிட்ட வேலைகளில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். செல்வமும் செல்வாக்கும் உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை மேம்படும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்கம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 30, 31.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9, 14.
பரிகாரம் தண்டாயுதபாணியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.