தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/கன்னி

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

மாத ராசி பலன் : கன்னி
14 நவ 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கன்னி

கன்னி

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்
அறிவாற்றலும் ஆத்ம பலமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். சகாய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலைகளில் ஆதாயம் உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் நண்பர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தொழிலில் நேரடி கவனம் கொள்வது நன்மையளிக்கும். சிலருக்கு கவனக்குறைவின் காரணமாக வெளியூர் பயணத்தின்போது சில இழப்புகள் உண்டாகும். உங்கள் தன குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். கையில் பணம் புரளும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.  பெண்களுக்கு வேலைப் பார்க்கும் இடத்திலும் குடும்பத்திலும் நிம்மதியான நிலை இருக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கணவரின் அன்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி முன்னேற்றமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 22.
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 23, 28. டிச. 1, 5, 10, 14.

பரிகாரம்: தில்லை நடராஜரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

அஸ்தம்
திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக்காரகன் கேது வருமானத்தை அதிகரிப்பார். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவார். பெரியோரின் ஆதரவை உண்டாக்குவார். அதே நேரத்தில், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, மனதில் குழப்பத்தையும் பிள்ளைகள் மற்றும் பூர்வீக சொத்தில் சங்கடங்களையும் ஏற்படுத்துவார். புதிய நட்புகளையும் இந்த நேரத்தில் ஏற்படுத்துவார். அவர்கள் வழியாக தங்கள் பாதையும் சிலருக்கு மாறும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் கர்மக்காரன் சனி பகவான் நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால், நண்பர்களிடையே பிரச்னை அதிகரிக்கும். நன்றாகப் பழகி வந்தவர்களும் எதிராக மாறுவர். கணவன் மனைவிக்குள்ளும் இணக்கம் இல்லாமல் போகும். எதை எடுத்தாலும் அங்கே ஒரு பிரச்னை உருவாகும். சிலருக்கு ஆரோக்கியத்தில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆதாயம் கூடும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கையில் பணம் புரளும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு மூன்றாம் இட சூரியன் முன்னேற்றத்தை உண்டாக்குவார். விவசாயிகளுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நன்மையாகும். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் கவனமாக இருப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: நவ. 23.
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 29. டிச. 2, 5, 11, 14.

பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.

சித்திரை 1, 2 ம் பாதம்
நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய காரகன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், விரய ஸ்தானாதிபதியுடன் பரிவர்த்தனை பெறுவதால் வீண் செலவுகள் குறையும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். குழப்பம் விலகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் சப்தமாதிபதி குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு கிடைப்பதால் தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். மனதில் நிம்மதி இருக்கும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி நெருக்கடி நீங்கும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச்செல்வர். ராசிநாதன் புதன் நவ. 30 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும். நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்குவரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி தேடிவரும். தொண்டர்கள் பலம் கூடும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் அனைத்திலும் நிதானமாக இருப்பது நன்மையளிக்கும். பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலைகள் எதிர்பார்த்த லாபத்தை வழங்காமல் போகும். பணியாளர்களும் உங்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவார்கள் என்பதால், இக்காலத்தில் அனைத்திலும் உங்கள் நேரடி கண்காணிப்பு அவசியம். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உருவாக வாய்ப்பிருப்பதால் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுவது இக்காலத்தில் நன்மையளிக்கும். இந்த நேரத்தில் தேவையற்ற விவகாரங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். வயதானவர்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: நவ. 24.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14.

பரிகாரம்: தண்டாயுதபாணியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us