மாத ராசி பலன்
மாத ராசி பலன் : கும்பம்
15 டிச 2025
முந்தய மாத ராசி பலன்

கும்பம்
கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிக்கும் வரை தொடர்ந்து முயற்சிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் நீங்கள் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். வர வேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீண்ட நாளாக விற்க முடியாத இடத்தை விற்று லாபம் காண்பீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வை சந்தித்து வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நெருக்கடி விலகும். பணப்பழக்கம் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு உங்கள் திறமையை அதிகரிப்பார். பணம், லாபம், செல்வாக்கு என்ற நோக்கத்தோடு உங்கள் செயல்கள் ஒவ்வொன்றும் இருக்கும். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய வாய்ப்பு உருவாகும். இந்த நேரத்தில் நல்லவர் யார், கெட்டவர் யார் என புரிந்து கொண்டு உங்களால் செயல்பட முடியும். பெண்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு ஜன.11 வரை படிப்பில் சிறப்பான நிலை இருக்கும் அதன் பிறகு கவனம் தேவைப்படும்.
சந்திராஷ்டமம்: ஜன.9
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன. 8.
பரிகாரம் அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடங்கள் விலகும்.
சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு எடுத்த வேலைகளில் ஆதாயம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதமாகும். உங்களுக்கென்று தனி செல்வாக்கு உண்டாகும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்களும் தேடி வரக் கூடிய நிலை ஏற்படும். ராசியாதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனதில் குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலைகளை முடிக்கும் நிலை உண்டாகும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். எப்படியாவது நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற மனநிலை உருவாகும். அதற்காக உங்களுக்குத் தெரிந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு கடந்த கால நெருக்கடி விலகும். பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். வியாபாரிகளுக்கு சிறிய முதலீட்டிலும், பெரிய அளவில் லாபம் காணக் கூடிய நிலை உண்டாகும். அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். தலைமையின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: ஜன. 9, 10
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 22, 26, 31. ஜன. 4, 8, 13
பரிகாரம் அனுமனை வழிபட அல்லல் போகும். நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: பிறருக்கு உதவும் குணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் கவனம் தேவை. ஒவ்வொன்றிலும் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நன்மை தரும். ஆனலும் ஜீவனாதிபதியும், சப்தமாதிபதியும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். எந்த ஒன்றிலும் உறுதியாக இருப்பீர்கள். முடியாத வேலைகளையும் முடித்து ஆதாயம் காண்பீர்கள். பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். சகோதரர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். விஐபிகள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கடந்த கால நெருக்கடி விலகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி மறையும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் கூடும். பழைய முதலீட்டில் இருந்து வர வேண்டிய லாபம் வரும். ஜென்ம ராகுவும், சனியும் உங்கள் நிலையை உயர்த்துவர். தடை, தாமதம் என்பதையெல்லாம் தாண்டி நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். குடும்பத்தினரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பர். நீண்ட நாளாக சந்தித்த நெருக்கடி, பிரச்னை, நோய் விலக ஆரம்பிக்கும். தெய்வ அனுகூலமும், பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜன. 10, 11
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 21, 26, 30. ஜன. 3, 8, 12
பரிகாரம் சண்முகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.