sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மேஷம்

/

மேஷம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

மாத ராசி பலன் : மேஷம்
15 டிச 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

மேஷம்

மேஷம்: அசுவினி..: உழைப்பையும், நேர்மையையும் முதலீடாக கொண்டு எடுத்த வேலையை முடிக்கும் உங்களுக்கு மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரித்தாலும், பூர்வ புண்ணியாதிபதி சூரியனும் உங்கள் ராசியாதிபதி செவ்வாயும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகள் நடந்தேறும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நினைத்ததை நடத்திக் கொள்ளும் நிலைமை உருவாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல் முடிவிற்கு வரும். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். டிச.25 வரை விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் புதன் அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிப்பார். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும் என்றாலும் மேலும் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையாகும். உங்கள் பாக்கியாதிபதி குரு வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களின் எப்போதும் கவனம் தேவை. பிறர் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதிலுள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவிற்கு வருவது நன்மை தரும்.  விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். கையில் பணப்பழக்கம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 17, 18. ஜன. 13, 14.
அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 25, 27. ஜன. 7, 9.
பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.

பரணி: நினைத்ததை சாதிப்பதில் உறுதியாகவும் அதற்காக தொடர்ந்து உழைத்திடவும் கூடிய உங்களுக்கு, மார்கழி மாதம் யோகமான மாதமாகும். மாதம் முழுவதும்  சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் ஆடை, ஆபரணம் சேரும். கையிருப்பு அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும்.  தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு, போட்டி, பிரச்னைகள் என்றிருந்த நிலை மாறும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட போராட்டம் விலகும். ஒற்றுமை உண்டாகும். புதிய வாகனம் இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றிவிட்டு வரக்கூடிய நிலை ஏற்படும். உதவி எனக் கேட்பவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயர்வாக இருக்கும். தொழில் முன்னேற்றம் பெறும்.  வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். டிச. 25 க்குள் எதிர்பார்த்த பணம் வரும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். லாப சனியும், ராகுவும் பணப்புழக்கத்தை அதிகரிப்பார்கள். வியாபாரத்தில் லாபத்தையும், வேலையில் உயர்வையும் உண்டாக்குவர்.  உங்கள் நீண்டநாள் கனவு நனவாகும். உடல்நலம் சீராகும்.
சந்திராஷ்டமம்: டிச. 18, 19. ஜன. 14.
அதிர்ஷ்ட நாள்: டிச. 24, 27. ஜன. 6, 9.
பரிகாரம் தில்லை காளியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

கார்த்திகை 1 ம் பாதம்: எந்த இடத்திலும் தனித்துவத்துடன் இருந்து வரும் உங்களுக்கு, மார்கழி அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் பாக்ய ஸ்தானத்தில் நட்பாக சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சி சாதகமாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். மறைந்த புதனால் டிச. 25 வரை செல்வம், செல்வாக்கு ஏற்படும். நினைத்த வேலைகளை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த பணம் வரும். திடீர் அதிர்ஷ்டம்  உங்களை திக்கு முக்காட வைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கும் ஏற்படும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீண்ட நாளாக நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இந்த நேரத்தில் லாபம் தரும். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சனி லாப ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். மாணவர்களுக்கு டிச. 25 க்கு பிறகு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.
சந்திராஷ்டமம்: டிச. 19
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 27, 28. ஜன. 1, 9, 10.
பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடந்தேறும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us