sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

மாத ராசி பலன் : ரிஷபம்
15 டிச 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்..: நிதானமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, மார்கழி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு சுகாதிபதியான சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் எதிர்பாராத நெருக்கடி, சங்கடம், பிரச்னை, இனம் புரியாத பயம் ஏற்படும். உங்கள் கவனக்குறைவால் வேலையில் தவறு ஏற்பட்டு மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும். மனம் எப்போதும் அழுத்தமாகவே இருக்கும் என்றாலும், டிச. 21 முதல் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்வரும் ஒவ்வொரு பிரச்னைகளையும் எதிர் கொண்டு வெற்றி பெறும் நிலை ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இந்த நேரத்தில் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பணியில் இருப்பவர்களும், சுய தொழில் புரிபவர்களும் இந்த நேரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் அலட்சியம் உங்களுக்கே எதிரியாகி விடும். கொடுக்கல் வாங்கலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு முயற்சி இந்த நேரத்தில் சாதகமாகும். தாய்வழி உறவுகளிடம் இடைவெளி ஏற்படுவதற்கும், உங்கள் உடல்நிலையில் அசதி சோர்வு  ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் சப்தமாதிபதி செவ்வாயும் மறைவு பெறுவதால் நண்பர்களை அனுசரித்துச் செல்வது, விட்டுக்கொடுத்து செயல்படுவது இந்த நேரத்தில் அவசியம். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் கூடும். பெண்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 
சந்திராஷ்டமம்: டிச. 20.
அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 24, 28. ஜன. 1, 6, 10.
பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட உங்கள் வாழ்வில் நன்மை உண்டாகும்.

ரோகிணி: மனம் என்ன சொல்கிறதோ அதைக்கேட்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். விரயாதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு வகையில் உங்களுக்கு நன்மையாகவே இருக்கும். செலவுகள் கட்டுப்படும். மறைமுகத் தொல்லைகள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். தூக்கமின்றி தவித்த நிலை மாறும். உங்கள் தனக்காரகன் புதன் டிச. 25 முதல் தடைபட்டிருந்த வேலைகளை நடத்தித் தருவார். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும் என்றாலும், ஜீவன ஸ்தானத்தில் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதுடன், யோகக்காரகன் ராகுவும் அங்கே சஞ்சரிப்பதால் வேலையில் அக்கறையுடன் இருந்து கொள்வது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். ஒரு சிலருக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்ற எண்ணமும் ஏற்படும் என்றாலும், இந்த நேரம் அதற்கு சாதகமான நேரமில்லை என்பதால், இருக்கின்ற இடத்தில், பார்க்கின்ற வேலையில் கவனமாக செயல்படுவதன் வழியாக உங்கள் சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சுயதொழில் செய்பவர்கள் புதியதாக முதலீடு செய்யும் முன் நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. இந்த மாதத்தில் எப்படி இருந்தாலும் ராசிநாதன் சுக்கிரனும், தனாதிபதி புதனும் வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உண்டாக்குவர். பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். உங்கள் விருப்பம் மாதத்தின் பிற்பகுதியில் பூர்த்தியாகும். விவசாயிகள் விளைச்சலில் முழு கவனம் செலுத்தி வர நன்மை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: டிச. 21.
அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 24, 29. ஜன. 2, 6, 11.
பரிகாரம் நரசிம்மரை வழிபட தடைபட்ட வேலை நடந்தேறும்.

மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் : நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் விவேகமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திர அதிபதியும், தைரிய வீரிய காரகனுமான செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களையும் அறியாமல் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். எந்தவொரு வேலையில் இறங்கினாலும் அதில் குழப்பம் அதிகரிக்கும். அரசுவழி வேலைகளிலும் நெருக்கடி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் சங்கடங்கள் ஏற்படும். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு அல்லது தாய் வழி உறவினர்களுடன் சங்கடம் என்ற நிலை உண்டாகும். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள் என்றாலும் டிச. 25 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியான புதன் மறைவு பெறுவதால் எடுத்த முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் சுமூகமான நிலை உண்டாகும். மனதில் இருந்த பயம் போகும். குடும்பத்தினர் உங்களை அனுசரிப்பர். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். டிச. 21 முதல் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலையும், பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். மாணவர்களுக்கு டிச. 25 க்கு மேல் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: டிச. 22.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 24, 27. ஜன. 6, 9.
பரிகாரம் சுப்ரமணியரை வழிபட நினைத்தது நடந்தேறும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us