மாத ராசி பலன்
மாத ராசி பலன் : தனுசு
16 ஜூலை 2026
முந்தைய மாத ராசி பலன்

தனுசு
தனுசு; மூலம்
எதிர்காலம் பற்றிய சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ஞானமோட்சக்காரகன் கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருளும் பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். குலதெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக குலதெய்வ ஆலயத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். மனதில் நிம்மதியும் தெளிவும் ஏற்படும். மாதம் முழுவதும் உங்கள் பாக்யாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகளில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையான செயல்பாடுகளை மேற்கொள்வது நன்மையாகும். தவறானவர்களின் சிபாரிசுகளையும், தவறான வழிமுறைகளையும் இந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் அதனால் சங்கடங்களை அடைய வேண்டியதாக இருக்கும். வேலை பளுவின் காரணமாக சிலருக்கு உடல்நிலையில் சிறு சங்கடங்கள் வந்து போகும் என்றாலும், அவையெல்லாம் மருத்துவத்தால் சீராகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். யோகக்காரகன் ராகு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் ஆதாயம் தரும். முயற்சிக்கேற்ற, முதலீட்டிற்கேற்ற லாபம் வரும். பெரிய நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஆதரவாக இருப்பர். சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 11.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 25, 30. ஆக. 3, 7, 12, 16.
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட குறைகள் விலகும். நன்மைகள் நடக்கும்.
பூராடம்
மனம் சொல்வதின்படி வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் ஆக. 1 வரை பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம்வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை இருக்கும். பொன் பொருள் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆக. 1 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலையெல்லாம் மாறும். நினைத்த வேலைகளை நடத்தி முடித்திடக்கூடிய அளவிற்கு செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்னச்சின்ன பிரச்னைகள் தலைக் காட்டினாலும் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். சிலர் குலதெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமான நிலையும் இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைப்பார்க்கும் இடத்திலும் வீட்டிலும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். வயதானவர்களுக்கு மனக்குறை விலகும். உடல்நிலை சீராகும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு படிப்பிலிருந்த தடை விலகும்.
சந்திராஷ்டமம்: ஆக. 12.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 24, 30. ஆக. 3, 6, 15.
பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 1 ம் பாதம்
வாழ்வில் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பாக்யாதிபதியான ஆத்ம காரகன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரிகள் கணக்கு வழக்குகள் காரணமாக அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும் என்றாலும், ஆக. 1 வரை செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்ததை சாதிப்பீர்கள். எந்தவிதமான எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை உங்களால் சரி செய்ய முடியும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கையில் பணம் புரளும். ஆக. 1 முதல் உங்கள் சப்தமாதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மறைந்த புதன் நிறைந்த செல்வங்களை உங்களுக்கு உண்டாக்குவார். தடைபட்ட வருமானம் வரும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும் புதிய தொழில் தொடங்கவும், இடம் வீடு வாங்கவும் கடனாக கேட்டிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆக. 9 முதல் குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் வீண் அலைச்சலும் விரய செலவுகளும் குறையும். மனதில் நிம்மதி இருக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயம் ஆதாயம் தரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனைக் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 13.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 21, 28, 30. ஆக. 1, 3, 10, 12.
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும்.