தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/துலாம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

மாத ராசி பலன் : துலாம்
16 ஜூலை 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

துலாம்

துலாம்; சித்திரை 3, 4 ம் பாதம்

தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரகனான செவ்வாய் ஆக. 1 வரை அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் எடுக்கின்ற வேலைகள் இழுபறியாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். உங்களுக்குள் இருந்த தைரியம், வேகம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும்.  அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையிலும் மனநிலையிலும் ஏதேனும் சங்கடங்கள் இருந்து கொண்டிருக்கும். குடும்பத்திலும் நிம்மதியான நிலை இல்லாமல் போகும் என்றாலும், ஞான மோட்சக்காரகன் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எப்போதோ உங்களால் பலன் அடைந்தவர்கள் இந்த நேரத்தில் ஓடோடிவந்து உதவி புரிவர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். குடும்பத்திற்குள் இருந்த சங்கடங்கள் விலகும். ஆக. 9 முதல் குரு நேர் கதியில் சஞ்சரிப்பதால் அவருடைய பார்வைகளால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 7.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 24, 27. ஆக. 6, 9, 15.

பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட நன்மைகள் நடக்கும்.

சுவாதி
உயர்ந்த லட்சியத்தோடு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். யோகக்காரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திருமண முயற்சி கை கூடவில்லையே என்று வருத்தம் மேலோங்கும். பூர்வீக சொத்திலும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கும். உறவுகளுடன் இணக்கமற்ற நிலை இருக்கும். உங்கள் லாபாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தகுதியின் அடிப்படையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அரசு அனுமதிக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலர் வசிக்கும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை உருவாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப் பலன்களை வழங்கி வந்த சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். முடிந்தவரை உடன் இருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். உடல் நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனமாக இருந்து கொள்வதும் உடனடியாக மருத்துவரை சந்திப்பதும்  நன்மையை உண்டாக்கும். வழக்கு விவகாரங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும். இழுபறியாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் காப்பது நன்மையாகும். உங்கள் தன குடும்பாதிபதியும் சப்தமாதிபதியுமான செவ்வாய் மாதத்தின் முற்பகுதியில் மறைவு பெறுவதால் முடிந்தவரை குடும்பத்தினரையும் வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச்செல்வது நன்மையாகும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிக்கவும். விவசாயிகளுக்கு இந்த மாதம் நெருக்கடியான மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி நன்மைதரும்.
சந்திராஷ்டமம்: ஆக. 7, 8.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22, 24, 31. ஆக. 4, 6, 13, 15.

பரிகாரம்: தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதம்
பிறரை வழிநடத்தும் அளவிற்கு திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தன புத்திர காரகன் குரு ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்னைகள் விலகும். உடன் பணிபுரிவோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். மேல் அதிகாரியின் உதவியால் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். ஆத்ம காரகன் சூரியன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண முடியும். வருமானத்திற்குரிய வழிகள் தெரியும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். ஆடை ஆபரணம் வாகனம் என்ற கனவு நனவாகும். கையில் பணம் புரளும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை உண்டாகும். ஆக. 1 முதல் உங்கள் பாக்யாதிபதி புதன் கேந்திர பலம் பெறுவதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும். விவசாயிகளுக்கு செலவு அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஆக. 8.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 24, 30. ஆக. 3, 6, 12, 15.

பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us