மாத ராசி பலன்
மாத ராசி பலன் : விருச்சிகம்
13 ஜூன் 2026
முந்தைய மாத ராசி பலன்

விருச்சிகம்
விருச்சிகம்
விசாகம் 4 ம் பாதம்
மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தன புத்திரக்காரகனான குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் நடைபெறாத வேலைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் தங்களுக்கு மேலானவர்களின் பாராட்டிற்கு ஆளாவர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கடன் சுமை விலகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். ஜூன் 19 வரை ராசிநாதன் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் மரியாதை கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 15. ஜூலை 13.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 21, 27, 30. ஜூலை 3, 9, 12.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
அனுஷம்
தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனிபகவான் சஞ்சரித்தாலும், பாக்ய குருவின் பார்வை சனி பகவானுக்கு உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உயர்கல்வி முயற்சி வெற்றியாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன்வரும். வேலைக்காக முயற்சி செய்து வருவோருக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆதாயம் கூடும். ஜூலை 8 முதல் அஸ்டம புதன் வக்கிர நிவர்த்தி அடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 15, 16. ஜூலை 13, 14.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27. ஜூலை 8, 9.
பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.
கேட்டை
வெற்றிப் படிக்கட்டில் கால் வைத்துள்ள உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ஜூலை 8 வரை புதன் வக்கிரமாக சஞ்சரித்தாலும், பாக்ய குருவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். ஜூலை 8 முதல் புதன் வக்கிர நிவர்த்தி அடைவதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம் தொழில் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். ஜூலை 6 வரை சப்தமாதிபதி சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். ஆடை ஆபரணம் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். ஜூன் 19 முதல் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்களிடம் இருந்த மந்த நிலை நீங்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும் என்றாலும், உங்கள் ஜீவனாதிபதி சூரியன் அஸ்டம ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையாக நடந்து கொள்வது அவசியம். தவறுகள் நேராத வகையில் நடந்து கொள்வது இந்த நேரத்தில் முக்கியம். வியாபாரிகள் கணக்கு வழக்கினை சரியாக வைத்துக் கொள்வதால் அரசு வழியில் ஏற்படும் பிரச்னைகள் உங்களை நெருங்காமல் போகும். சுக ஸ்தானத்தில் யோகக் காரகன் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். தாய் வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். அந்நியரால் ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், போராட்டங்கள் முடிவிற்கு வரும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 16, 17. ஜூலை 14.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9.
பரிகாரம்: அபிராமியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.