அடுத்த ஆண்டு ரகுல் பிரீத் சிங் திருமணம்
ADDED : 1467 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடிக்கிறார். தனது பிறந்த நாளான கடந்த அக்டோபர் 10-ந்தேதி ஹிந்தி பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை தான் காதலிப்பதை வெளிப்படையாக அறிவித்தார் ரகுல். அதேபோல் ஜாக்கியும் காதலை உறுதிப்படுத்தி ரகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதன்காரணமாகவே சில ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த தங்களது காதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் முயற்சியாக இப்போது வெளிப்படையாக அறிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு தனது கைவசமுள்ள அரை டஜன் படங்களிலும் நடித்து முடிக்க எண்ணி உள்ளார் ரகுல்.