ஹிந்தியில் கவனம் செலுத்தும் சமந்தா
ADDED : 1536 days ago
சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய போவதாக அறிவித்து விட்ட நிலையில், தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, இதையடுத்து சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தி பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹந்தியில் அறிமுகமான சமந்தா, தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதோடு தெலுங்கில் கதையின் நாயகியாக நடிப்பதற்கும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. இந்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்போகிறார் சமந்தா.