தயாராகும் அடுத்த வாரிசு நடிகை
ADDED : 1467 days ago
சினிமாவில் வாரிசு நடிகர்கள் கலாச்சாரம் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. அந்தவகையில் கன்னட திரையுலக தம்பதிகளான ரேகா - வசந்தகுமாரின் மகள் பூஜா குமார் இப்போது நடிகையாக களமிறங்கி உள்ளார். இவர் கூறுகையில், ‛‛தமிழில் நல்ல பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்'' என்கிறார். அதோடு, ‛கவர்ச்சி மற்றும் குடும்ப பாத்திரம் எதுவானாலும் வெளுத்து வாங்குவேன்' எனக் கூறுவதை போல் மாடர்ன் உடையில் ‛போட்டோஷூட்' எடுத்து, அதை சமூகவலைதளங்களில் உலவ விட்டுள்ளார்.