உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் ஜோடி கரீனா கபூர்

பிரபாஸ் ஜோடி கரீனா கபூர்

ராதே ஷ்யாம், சலார் படங்களை முடித்துவிட்ட நடிகர் பிரபாஸ் இப்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து நாக் அஷ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதுதவிர சமீபத்தில் பிரபாஸின் 25வது படமாக ‛ஸ்பிரிட்' உருவாவதாக அறிவிக்கப்பட்டது. இதை அர்ஜூன் ரெட்டி பட புகழ் சந்தீப் வாங்கா ரெட்டி இயக்குகிறார். இந்த படம் உட்பட பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்தும் பான் இந்திய படமாக உருவாவதால் பெரும்பாலும் பாலிவுட் நடிகையை ஹீரோயினாக தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்த படத்தில் நாயகியாக கரீனா கபூர் நடிக்க உள்ளாராம். இதற்காக அவரிடம் பேசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !