உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஜென்ட் கண்ணாயிரம் ஆன சந்தானம்

ஏஜென்ட் கண்ணாயிரம் ஆன சந்தானம்

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் ‛டிக்கிலோனா'. இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஏஜென்ட் கண்ணாயிரம் என பெயரிட்டுள்ளனர். சந்தானம் நாயகனாக நடிக்க, ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதியவர் மனோஜ் பீதா இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற காமெடி படமான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா படத்தின் ரீ-மேக்காக இந்த படம் உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !