முதன்முறையாக வெளியே வந்த சமந்தா
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, தனது கணவருடனான திருமண முறிவு குறித்து சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை சமந்தா. அப்படி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பெல்லாம், தான் செல்லும் இடங்களில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து அப்டேட் தகவல்களை கொடுத்து வந்தார் ஆனால் கடந்த சில நாட்களாக அவர் வெளியில் எங்கும் சென்றதாக தெரியவில்லை. அதுகுறித்த புகைப்படங்களோ தகவல்களோ எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளான இரண்டு நாய்களுக்கும் உடல்நிலை சரியில்லை என, கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்து வைத்தியம் பார்த்துள்ளார் சமந்தா. இதுகுறித்த புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. அந்தவகையில் தனது திருமண முறிவு அறிவிப்புக்கு பிறகு சமந்தா தற்போதுதான் முதன்முறையாக வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.