உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பன்மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் ராணா டகுபதி

பன்மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் ராணா டகுபதி

நடிகர் ராணா டகுபதி, தசரா பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி, தன் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். அவரது அடுத்த திரைப்படம் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என பன்மொழிகளில் பிரமாண்ட இந்திய திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தினை தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர், அவள் மற்றும் நெற்றிக்கண் படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்குகிறார். இத்திரைபப்டத்தின் பணிகள் 2022ல் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !