உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரரைப் போற்று சாதனையைக் கடக்குமா ஜெய் பீம் டீசர் ?

சூரரைப் போற்று சாதனையைக் கடக்குமா ஜெய் பீம் டீசர் ?

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜெய் பீம் இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியானது.

இப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் சூர்யாவின் முந்தைய பட டீசர் சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக சூரரைப் போற்று டீசர் 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜெய் பீம் டீசர் 24 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வைகளைப் பெற்று முறியடித்துள்ளது.

தற்போது 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது ஜெய் பீம் டீசர். சூர்யா பட டீசர்களில் அதிகபட்சமாக சூரரைப் போற்று டீசர் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளதே சாதனையாக இருக்கிறது. அந்த சாதனையைக் கடக்க ஜெய் பீம் டீசருக்கு இன்னும் 2 மில்லியனுக்குக் கொஞ்சம் கூடுதலான பார்வைகளை தான் கிடைக்க வேண்டும். படம் ஓடிடியில் வெளியாக இன்னும் 10 நாட்கள் இருப்பதால் அதற்குள் அந்த சாதனையைப் புரிந்துவிட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !