பெங்களூரு திரைப்பட விழாவில் கட்டில் படத்துக்கு விருது
ADDED : 1463 days ago
பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது, இந்த விழாவில் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை தமிழில் தயாராகி உள்ள கட்டில் படம் பெற்றது. திரைப்படத்திற்கான விருதை அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி உள்ள படம். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் ஒரு கட்டிலை சுற்றிய கதை. விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.