உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிகட்டத்தில் லிங்குசாமியின் தெலுங்கு படம்

இறுதிகட்டத்தில் லிங்குசாமியின் தெலுங்கு படம்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தனேனி, நடிக்கும் படத்தின் படப்பிப்புகள் இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. இதில் கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, ஆதி உள்பட பலர் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிராசத் இசை அமைக்கிறார்.

திட்டமிடப்பட்ட காலத்தில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கிய கலைஞர்களுடன் நடிகர் ஆதி பினுஷெட்டி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகளை தயாரிப்பாளர்கள், விரைவில் வெளியிடவுள்ளனர். இந்த படம் தமிழிலும் வெளிவருகிறது.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !