தனுசுடன் மீண்டும் இணைந்த யோகிபாபு
ADDED : 1451 days ago
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப் பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்குப்பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் நானே வருவேன். இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியான நிலையில், இப்போது இந்துஜா நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
கர்ணன் படத்தை அடுத்து தனுஷின் இந்த படத்தையும் தாணு தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில் தற்போது யோகிபாபுவும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அந்தவகையில் கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் நானே வருவேன் படத்தில் தனுசுடன் இணைந்து நடிக்கிறார் யோகிபாபு.