வெந்து தணிந்தது காடு : விமானத்தில் பறந்தபடி அப்டேட் கொடுத்த சிம்பு
ADDED : 1451 days ago
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். தாமரை பாடல்கள் எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படம் தொடங்கப்பட்டபோதே பர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இரண்டுகட்ட படப்பிடிப்புகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் மும்பை சென்றுள்ளார் சிம்பு. தான் விமானத்தில் செல்லும் ஒரு புகைப்படத்தை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.