வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் அஜித் - வைரலான போட்டோ
ADDED : 1463 days ago
சினிமா நடிகர்களில் மிகவும் வித்தியாசமானவர், எல்லா விஷயத்திலும் தனித்து தெரிபவர் நடிகர் அஜித். இரு ஆண்டுகளாக நடந்து வந்த வலிமை படப்பிடிப்பை முடித்துவிட்டு வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் தாஜ்மஹால் சென்றிருந்தார். தாஜ்மஹால் முன்பு அவர் எடுத்த போட்டோக்கள் வைரல் ஆகின. தொடர்ந்து அவர் பல இடங்களுக்கு சென்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று(அக்.,19) இந்தியா - பாகிஸ்தானை இணைக்கும் வாகா எல்லைக்கு சென்றுள்ளார் அஜித். அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். ராணுவ வீரர்களும் அஜித் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதோடு வாகா எல்லையில் தேசிய கொடியை ஏந்தி அஜித் போஸ் கொடுத்த போட்டோக்கள் உள்ளிட்ட பல போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, டிரெண்ட் ஆனது.