சினிமாவாக தயாராகிறது ஷீரடி சாய்பாபா மகிமை
ADDED : 1463 days ago
60க்கும் மேற்பட்ட குறும்படங்கள், டெலி பிலிம்களை தயாரித்த பி.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது. ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்களில் சிலவற்றை ஷீரடி சாய்பாபா மகிமை என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறது.
ஷீரடி சாய்பாபாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர் என் நெஞ்சை தொட்டாயே, திகிலோடு விளையாடு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். படத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களில் பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கின்றனர். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அபி ஜோஜோ இசையமைக்கிறார். பத்திரிகையாளர் பிரியா பாலு இயக்குகிறார்.