உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேப்பர் கப்பலில் பொக்கே வாழ்த்து! சரவணன் மீனாட்சி ஜோடியின் ரொமாண்டிக் மொமண்ட்ஸ்

பேப்பர் கப்பலில் பொக்கே வாழ்த்து! சரவணன் மீனாட்சி ஜோடியின் ரொமாண்டிக் மொமண்ட்ஸ்

சரவணன் மீனாட்சி என்ற பெயரையும் அதன் தீம் சாங்கையும் கேட்டவுடன் முதன் முதலில் மனதிற்கு வருவது செந்திலும், ஸ்ரீஜாவும் தான். அந்த அளவுக்கு சரவணனாகவும் மீனாட்சியாகவும் காதல் ஜோடியாக வாழ்ந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அதன் பிறகு சரவணன் மீனாட்சியில் பல சீசன்கள் வந்தாலும் அவை வெற்றியே அடைந்திருந்தாலும் கூட மனதுக்குள் நிலைத்து நிற்பது என்னவோ அந்த முதல் காதல் ஜோடி தான்.

நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகிவிட்ட செந்திலும் ஸ்ரீஜாவும் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் செந்தில் தனது பிறந்தநாளை கேரளாவில் இருக்கும் ஸ்ரீஜா வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். அப்போது தனது காதல் கணவருக்கு ஒரு பேப்பர் கப்பல் செய்து அதில் பூக்களை வைத்து ஸ்ரீஜா பிறந்தநாள் வாழ்த்தை அனுப்பி வைக்கிறார். இது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர்களிடையே நடக்கும் இந்த குறும்புத்தனமான அழகான ரொமான்ஸை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அதே சமயம் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டுக்கொண்டிருக்க அங்கு மழைத்தண்ணீரில் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரையும் பார்த்து இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா என கலாய்த்தும் வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !