உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவ.,19ல் வெளியாகும் முருங்கைக்காய் சிப்ஸ்

நவ.,19ல் வெளியாகும் முருங்கைக்காய் சிப்ஸ்

நடிகர் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, யோகிபாபு, மனோபாலா, மதுமிதா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். புதுமுக இயக்குநர் ஸ்ரீஜார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, வீந்திரன் சதிரசேகரன் சார்பில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !