மேலும் செய்திகள்
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1412 days ago
புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச்
1412 days ago
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடித்து இந்த மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் 'டாக்டர்'. 50 சதவீத இருக்கை அனுமதியிலேயே இப்படம் 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து இந்தப் படத்தை வரும் தீபாவளிக்கு முன்னணி டிவி ஒன்றில் ஒளிபரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு நவம்பர் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகிறதாம்.
ஒரு புதிய படம் வெளிவந்ததும் நான்கு வாரங்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிட்டுக் கொள்ள தியேட்டர்காரர்கள் அனுமதி அளித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படம் வெளியாக உள்ளது. தீபாவளி வரையிலும் தியேட்டர்களில் ஓரளவிற்கு வசூலுடன் இப்படம் ஓடி முடித்துவிடும். சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகிய இரண்டில் மட்டுமே இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவை எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தியேட்டர் வசூல் என்பது கூடுதல் வருமானம் தான்.
1412 days ago
1412 days ago